தனிஈழம் அடுத்த நகர்வு…அதிரடி அர்ஜூன் சம்பத்

0
346
அர்ஜூன் சம்பத்
Advertisement

தனிஈழம் அடுத்த நகர்வு…அதிரடி அர்ஜூன் சம்பத்

Advertisement

தமிழன் சிங்களன் என்பது மாறி இந்து பெளத்தம் என்ற அடுத்த நகர்வுக்கு செல்கிறது.

இந்துத்தூவா அமைப்பின் முக்கியமானவரான இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத், பாஜக வோடும், ஆர்எஸ்எஸ் அமைப்போடும் மிக நெருக்கமானவர்.

  ஈழ விடயத்தில் இந்து அழிப்பு, ஆலய இடிப்பு, பெளத்தத்தின் வெறியாட்டம் என விஸ்பரூப ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர்  நமது தமிழ் செய்தி நிருபருக்கு அளித்த சிறப்பு போட்டியில் கூறியதாவது:

இலங்கை ஒரு இந்து நாடு என்பதை சிங்கள அரசு கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைத்தது வருகிறது. இந்து மதத்தில் இருந்து உருவான ஒருபிரிவு தான் புத்தமதம்.

இந்துவாக பிறந்த அம்பேத்கார் கிறிஸ்தவத்தை தழுவவில்லை அவர் பெளத்த மதத்தை தழுவியதாலேயே புத்த மதத்தை தலித்துகளின் மதம் என்று ஒரு சாரா் புது கருத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இனவெறி படுகொலை செய்த சிங்கள அரசு அழைக்கப்படும் விழாவில் நமது பிரதமர் கலந்து கொள்ளவது ஒட்டு மொத்த இந்து சமுகத்தையும் அவமதிப்பதகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

கடந்த முறை மோடிஜீ இலங்கை சென்று சிவன் கோவிலில் தரிசனம் செய்து வந்தார், அது பற்றி நாங்கள் எந்தவொரு விமர்சனம் செய்ய வில்லை,

வரும் மே17-ல் தமிழ் நெஞ்சங்களை பதறவைக்கும் இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த அந்த நாளில் சிங்கள வெறியர்கள் நமது பிரதமரை அழைத்தது தான் கொடுமை,

                                     

பத்து தமிழனுக்கு ஒரு சிங்கள ரானுவன் இன்று வரை நிறுத்திவைத்து, தனி மனித சுதந்திரத்தை கொலை செய்து வருகிறது, பெளத்தமத அரசு.

இந்து தமிழனின் பூமி தான் ஈழத்தமிழ் பூமி எனும் வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது பொளத்த வெறி கொண்ட சிங்கள அரக்க அரசு.

இலங்கையில் இடையில் புகுந்த புத்த மதம், இந்துமதத்தை கொஞ்சம்..கொஞ்சமாக அழித்து இன்று 18 அல்லது 20 சதவிகிதம் இருக்கும் இந்துக்களையும் சித்தரவதை செய்து வருகிறது………

என்று மனம் குமுறினார். அர்ஜீன்சம்பத்…இவரின் வீடியோ பேட்டி மே10- ம் தேதி நமது தமிழ் செய்தியில் வெளிவர இருக்கிறது.

செய்திகள் :- சங்கரமூர்த்தி, 7373141119