கடலில் மூழ்கிய மூன்று மாணவர்கள்..! தேடும் பணி தீவிரம்..!

கடலில் மூழ்கிய மூன்று மாணவர்கள்..! தேடும் பணி தீவிரம்..!
Advertisement
Advertisement

3 பள்ளி மாணவர்கள் சென்னை மெரினா கடலில் மூழ்கி மாயமாகினர்.

தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 15 பேர், பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு மெரினா கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

கடலில் குளித்து கொண்டிருந்தபோது தாம்பரத்தை சேர்ந்த வினோத் (14), சதீஷ் குமார் (14) மற்றும் கிண்டியை சேர்ந்த செந்தில் குமார் (14) ஆகிய 3 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார், அலையில் சிக்கி மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீனவர்களும் மாணவர்களை தேடிவருகின்றனர். ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும், தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2017 – 18 – ல் மட்டும், 15 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட, 20 பேர் மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, இதுவரை கிடைக்கவில்லை என, போலீஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பலர் எச்சரிக்கையை மீறி,

ஆபத்தான பகுதியில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது, தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.