2ஜி வழக்கில் சம்பந்தபட்டோருக்கு வினோத தண்டனை…!

2ஜி வழக்கில் சம்பந்தபட்டோருக்கு வினோத தண்டனை...!
Advertisement
Advertisement

2 ஜி வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதற்காக 15 ஆயிரம் மரக்கன்றுகளை நடுமாறு டெல்லி உயா்நீதிமன்றம் விசித்திர தண்டனையை வழங்கி உள்ளது.

2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோா் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பா் மாதம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதனை எதிா்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு தொடா்பாக பல்வேறு தரப்பினா்களிடம் இருந்தும் டெல்லி உயா்நீதிமன்றத்தில் பதில்களை பெற்று வருகிறது.

இந்த வழக்கில்  விசாரணையின் போது, பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்ததுடன்,

கூடுதல் அவகாசம் கோாியதால் ஸ்வான் தொலைத் தொடா்பு நிறுவனா் ஷாகித் பல்வா உள்ளிட்டோருக்கு வினோத தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இவா்கள் அனைவரும் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் மொத்தமாக 15 ஆயிரம் மரக்கன்றுகளை தெற்கு டெல்லி பகுதியில் நட வேண்டும்.

இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகளை இவா்கள் வருகின்ற 15ம் தேதிக்குள் அணுக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மாா்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.