காஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 11 போ் பலி..!

காஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 11 போ் பலி..!
Advertisement
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 போ் உயிாிழந்துள்ளதாகவும்,

பலா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் மாண்டி அருகில் ப்ளீரா என்ற பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

லோரானில் பகுதியில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு சென்ற பயணிகள் பேருந்து இன்று காலை திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 11 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த விபத்தில் பலா் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.