திமுகவின் விழாவில் ரஜினி மற்றும் கமலஹாசன்..!

34
677
திமுகவின் விழாவில் ரஜினி மற்றும் கமலஹாசன்..!
Advertisement

திமுகவின் விழாவில் ரஜினி மற்றும் கமலஹாசன்..!

Advertisement

திமுகவின் முரசொலி நிறுவனத்தின் பவள விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுதிமுகவின் விழாவில் ரஜினி மற்றும் கமலஹாசன்..!

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி கலைவாணர் அரங்கில் திமுக முரசொலி பவள விழா நடைபெறுகிறது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொள்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக திமுகவின் முரசொலி விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அந்த சமயத்தில் அவர் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல் தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாக நடிகர் கமலஹாசனும் குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே கமலுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் கடுமையான பனிபோர் நடந்து வருகிறது.

இந்நிலையில், திமுக அரசியல் விழாவில் ரஜினி, கமல் கலந்து கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள்: ரோகிணி