வரும் முன் காக்கும்…. அகத்தியா….!

0
316
வரும் முன் காக்கும்.... அகத்தியா....!
Advertisement

வரும் முன் காக்கும்…. அகத்தியா….!

Advertisement

தெருவுக்கு இரண்டு மருத்துவமனைகள். இது எதை காட்டுகிறது? நம்மில் எத்தனை பேர் இதுபற்றி யோசித்து இருப்போம்.வரும் முன் காக்கும்…. அகத்தியா….!

இப்படியான மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சிக்கு காரணம் நமது உடல் வளர்க்கும் உணவே…! என்கிறது அகத்தியா நேச்சுரல் உணவு பொருட்களின் நிறுவனம்.

மனிதகுலத்தின் ஆரோக்கியத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் நவீன விஞ்ஞான உணவின் அவலத்தையும்.

இயற்கை உணவின் மென்மையை விரிவாக நமது வாசகர்களுக்கு விவரிக்கிறார்.

அகத்தியா நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவர்.

நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் சேர்க்கப் படும் பொருட்களின் தரம் என்ன? அவை எப்படிப்பட்ட முறையில் உற்பத்தியாகின்றன என்று நமக்குத் தெரியுமா?

நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருக்கின்றன.

அவை நம் உடலில் சிறிதுசிறிதாகச் சேர்ந்து, காலப்போக்கில் பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்துகின்றன.

உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட ரசாயன உரங்கள், நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன.

தாய்ப்பாலில்கூடக் கலந்துவிட்ட டி.டி.டி., குழந்தைகளிடம் மூளை வளர்ச்சி மற்றும் பிறவிக் குறைபாடுகளை உருவாக்கும் எண்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லிகள் இன்னமும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

ஒவ்வொரு வேளாண் பொருட்கள் உற்பத்தி ஆகிக் கடைக்கு வந்து சேர்வதற்குள் நமது உடல் நலத்திற்கு ஒவ்வாத பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

கார்பைடு கல் வைத்துபழுக்க வைக்கும் பழங்களால். நமது நாக்கில் உருவாகும் ஜிவுஜிவுத் தன்மை, மரத்துப்போய், நரம்பு கோளாறு போன்றவை ஏற்படுகிறது.

ஆனால், இயற்கை வேளாண் பொருட்களில் இந்த ரசாயனங்கள் எவையும் கிடையாது. செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாமல் தயாரிக்கப்படும் பொருட்களே இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்கானிக் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இந்தப் பசுமை அங்காடிகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

அதில் ஒன்று தான் நமது “அகத்தியாவின்  நேரடி கண்காணிப்பில் சேகரித்து வழங்கும் இயற்கை விவசாய பொருள்கள்”.

                                                

இயற்கை விவசாயம் எனும் ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி,

செரிமானக் குறைபாடுகளை சரியாக்கி, உடல் ஆரோக்கியமாகி வாழ்க்கையில், மருந்து….. மாத்திரைகளை தேடவேண்டாம்.

ஊட்டச்சத்தில்லாத உணவு தரும் பின்விளைவுகளை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன்  ஆர்கானிக் அருமை புரியும்

அதேநேரம் ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது பழமையானது என்றோ, வயதானவர்களுக்கான, நோயாளிகளுக்கான உணவு என்றோ நினைக்கும் மனப்பான்மையிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.

நோய்கள் வந்தபின் பசுமை அங்காடிகளைத் தேடி ஓடுவது காலம் கடந்த ஞானம் எதையும் “வரும் முன் காக்க”…. என்பது சித்தர்கள் வாக்கு.

அதை தான் “அகத்தியா நேச்சுரல்” நிறுவனம் நுகர்வோர்களிடம் வலியுறுத்தி, ரசாயனம் எனும் கொடிய விஷம் இல்லாத இயற்கை உணவுப் பொருட்களை… தந்து வருகிறது.

ரசாயன உணவுப் பொருட்களால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்?

ரசாயன எச்சம் கொண்ட உணவைச் சாப்பிடுவதால் நம் உடம்பில் ஸ்டீராய்ட்ஸ் போன்றவை அதிகம் சேர்கின்றன.

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,

உடல்நலப் பரிசோதனையில் தேர்ச்சி பெறவும் ஆர்கானிக் உணவு வகைகள்தான் கொடுக்கப் படுகின்றன.

அத்துடன் புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் (obesity) போன்ற பின்விளைவுகளுக்கும், ரசாயன உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்வதும் ஒரு காரணம்.

கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் கூழ் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லை.

கம்பு இட்லி, கேழ்வரகு உப்புமா, பச்சைப்பயறு சட்னி என்று பல சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டுச் சுவை நரம்புகளுக்கு உற்சாகம் தரலாம்.

சிறு தானியங்களைக் கொண்டு சுவையான பலவகையான……. ரெடிமிக்ஸ் தற்போது  “அகத்திய நேச்சுரல்” நிறுவனம் வழங்கி வருகின்றது.

அகத்தியர் அருளிய ஆர்காணிக் உணவு முறை நம் உடலுக்கு மட்டுமில்லாமல், இந்த மண்ணுக்கும் இயற்கைக்கும் ஆரோக்கியமானது.

என்றார் அவர்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119