புதிய இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கல்..!

புதிய இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கல்..!
Advertisement
Advertisement

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா லோக்சபாவில் ( இன்று 8 ம் தேதி ) தாக்கல் செய்யப்பட்டது.புதிய இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கல்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு,

பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தாக்கல் செய்தார்.

ராஜ்யசபாவில், நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.