பா.ம.க வின் 10 கோரிக்கைகள்…!

பா.ம.க வின் 10 கோரிக்கைகள்...!
Advertisement
Advertisement

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

அந்த கோரிக்கைகள்:
01.காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்

02. தமிழகத்தின் 20 பாசன திட்டங்கள் மற்றும் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

03. இட ஒதுக்கீட்டை காக்க, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

04. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

05. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும்.

06. தமிழகத்தில் நீர்வளத்தை காக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.

07. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

08. காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.

09. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும்.

10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.