விவேக்கிற்கு சந்தானம் செலுத்தும் ’நன்றிக்கடன்’!

34
980
விவேக்கிற்கு சந்தானம் செலுத்தும் ’நன்றிக்கடன்’!
Advertisement
Advertisement

தான் ஹீரோ ஆன பிறகும் சரி, காமெடியனாக நடிக்கும்போதும் சரி,  பொதுவாகவே தன்னோடு சேர்ந்து நடிக்கும் காமெடியன்களை சகட்டு மேனிக்கு கலாய்ப்பதுதான் சந்தானத்தின் ஸ்டைல்.

ஸ்கிரினில்தான் இந்தக் களேபரம். ஆனால், நேரில் அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையும், பணமும் நினைத்ததை விட கூடுதலாகவே கிடைக்கும்.

அவர் புதிதாக நடிக்கவிருக்கும் சக்கப் போடு போடு ராஜா படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் நடிக்கிறார். ரொம்ப சீனியர்.

என்னதான் பண்ணுவார் சந்தானம்?

டயலாக்குகளில் காரத்தை குறைத்துவிட்டாராம். ஸ்கிரினிலும் அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதால்தான் இந்த முடிவு.

சந்தானத்துடன் சேர்ந்து நடிக்க, விவேக்கும் இறங்கி வந்தது அவரது பெருந்தன்மை என்று புளகாங்கிதப்படுகிறது படக்குழு.