விளம்பர வகைகள்

376
4182
விளம்பர வகைகள்
Advertisement
Advertisement

விளம்பர வகைகள்

பொருள் விளம்பரம்

உற்பத்தி நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்காக இதழ்களின் வாயிலாக விளம்பரம் செய்கின்றன

உற்பத்திப் பொருள் விளம்பரம்

உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இதழ்களின் வாயிலாக விளம்பரப்படுத்துதல் உற்பத்திப் பொருள் விளம்பர வகையைச் சேர்ந்தது.

பருவ இதழ்களையும், தொலைக்காட்சியையும் இவை ஆட்கொண்டுள்ளன. துணிசோப்பு, நறுமணப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் இதில் சேரும்.

சாரதா பட்டு, நல்லி சில்க், ராஜ்கமல், ஜான்சன் வேட்டிகள், S.குமார் சூட்டிங்ஸ், என்டைஸ் யூனிபார்ம், போத்தீஸ் இது போன்ற விளம்பரங்கள் துணிகளுக்கு மட்டுமே நிறைய வருகின்றன

ஹார்லிக்ஸ், விவா, காம்ப்ளான், மைலோ இவைபோலச் சத்துக்காகக் குடிக்கத்தக்கவை பற்றி விளம்பரம் வருகிறது.

இதுபோன்றே எத்தனையோ பொருள்களுக்கு விளம்பரம் வருகிறது.

நிறுவனப் பொருள் விளம்பரம் (Institutional Advertisement)

பொருள் விளம்பரத்தில் நிறுவனப் பொருள் விளம்பரமும் உள்ளடங்கும். இவ்விளம்பரங்கள் நம்பிக்கையோடு மக்களை வாங்கத் தூண்டுபவையாக உள்ளன.

எடுத்துக்காட்டு
கோத்ரெஜ் – பீரோ, சோப்பு
புராக்டர்&காம்பில் – ஷாம்பு, சோப்பு, அழகுப் பொருட்கள்
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்
 – பற்பசை, சோப்பு, அழகுப் பொருட்கள்

பி.பி.எல் இந்தியா – தொலைக்காட்சி, சலவைப்பொறி, மின்னணுச் சாதனங்கள் 
மாருதி உத்யோக் லிமிடெட்
 – சிற்றுந்து
டி.வி.எஸ் சுசுகி –
 மொபெட் 

மற்றும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் குரூப்

நிறுவன விளம்பரம்

 கூட்டுறவு நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தம் தொழிலை இலாபகரமாக நடத்துவதற்கான விளம்பரங்களைக் கொடுக்கின்றன

நிதி நிறுவன விளம்பரம் (Finance Advertisement)

நிதி நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள், வங்கிகள் இவை முதலீடு, தவணை, சீட்டு, கடன் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள் தருகின்றன

எடுத்துக்காட்டு
எஸ்.பி.ஐ – SBI Mutual Funds
ஐசிஐசிஐ – ICICI Credit Cards
எல்.ஐ.சி – எல்.ஐ.சி வீட்டுவசதிக் கடன் நிறுவனம்
ஸ்ரீராம் சிட்ஸ் – சீட்டு நிறுவனம்

கூட்டுறவு விளம்பரம் (Co-operative Advertisement)

கூட்டுறவு நிறுவனங்கள் தருகின்ற விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தன. இவை சேமிப்புக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்கின்றன. சில தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு விளம்பரம் செய்கின்றன

எடுத்துக்காட்டு
கோ ஆப்டெக்ஸ் – துணிவகைகள் 
ஆவின் – 
பால் மற்றும் பால்பொருள் 
அமுதம் சிறப்பங்காடி – 
உணவுப் பொருள், நுகர்பொருள்கள்

நமது சிறப்பு நிருபர் – சஞ்சய் சுதன்

13179098_1072504099480569_2669321235694817992_n