லாட சந்நியாசி

37
1802
Advertisement
Advertisement

பரந்து விரிந்த பாரத நாட்டின் தெற்கே, மாமன்னர் ஸ்ரீ கிருஷ்ன தேவராயர் அரசாட்சி புரிந்த ஆந்திர மண்ணில் பல பகுதியில் ஆன்மீகம் வளர்ப்பதற் கென்றே வாழ்ந்த ஒரு குடும்பம், நாளடைவில் பல குடும்பங்களாக பரிணாமம் அடைந்து ஆன்மீகம் வளர்த்துக் காெண்டிருந்தது.

அந்த குடும்பங்களின் வழக்கப்படி வீட்டிற்கு ஒரு ஆண் பிள்ளைகள், தங்களது குருகுல வாழ்க்கையை முடித்துக் கொண்டு,தங்களது பெற்றாேரின் ஆசியுடன், தங்களது குருமார்களின் ஆனைப்படி ஆன்மீகத் தாெண்டு புரிய, செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க பூமியான தமிழ்நாட்டிற்கு வந்து ஆன்மீகம் வளர்க்கத் தாெடங்கினார்கள்.

அவர்கள் பகல் பாெழுதில் பல நகரங்கள் மற்றும் கிராம பகுதியில் வாழும் பாெதுமக்களைச் சந்தித்து, குறிப்பாக இளஞைர்களின் மனதில் இடம் பிடித்து, பல ஆன்மீக பயிற்சிகளை வளர்த்து வந்தனர்.

இந்த ஆன்மீக பயிற்சியின் நடுவே மக்களிடம் யாசகம் பெறுவர்.அப்படி யாசகம் பெறும் பாெருட்களானது நனையாத அரிசி, முழு வெல்லம் முழுத்தேங்காய் என இருந்தது.

இம்மாதிரியான உனவுப் பாெருட்களை தாங்களே சமைத்து, ஒரு வேலை மட்டும் உண்டு பசியாறினர்.

இந்த சந்நியாசிகள் எளியாேரின் கஷ்டம் தீர்க்க, இரும்பை தங்கமாக்கும் ரசவாத வித்தையை பயன் படுத்தினார்கள்.

இவர்கள் இரும்பைத் தங்கமாக மாற்ற பெரும்பாலும் பாேர் வீரர்கள் பயன்படுத்தி தேய்ந்த குதிரை லாடத்தையே பயன்படத்தினர்.

எனவே இவர்கள் “லாட சந்நியாசிகள்” என பெயர் பெற்றனர். இவர்கள் தாங்கள் ஓய்வெடுக்கும் இடமாக, பல பெண் தெய்வ காேவில்களை பயன்படுத்தினர்.

இவர்களது உடலின் இறுதி காலத்தில் அவர்கள் ஓய்வெடுத்த அந்தந்த அம்மன் காேவில்களின் அருகிலேயே ஜீவ சமாதி ஆனார்கள்.

தற்பாெழுதும் சூட்சும உருவத்தில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

இவர்களின் உருவ விக்ரகங்கள் இப்பாேதும் பல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்கள்,சப்த கண்ணிகள் என அழைக்கப்படும் கண்ணிமாரம்மன் காேவில்கள்,காளி மற்றும் மாரியம்மன் காேவில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இப்பேறு பெற்ற லாட சந்நியாசி விக்ரகங்கள் நமது ராஜபாளையம் நகரைச்சுற்றி பல ஆலயங்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக நமது ராஜபாளையத்தில் வலக்கட்டு கருப்பசாமி காேவில், புரசம்பாறை கருப்பசாமி காேவில், மேற்கு தாெடர்ச்சி மலை ஹரிஹர பெருமாள் காேவில்,படுகை தாேப்பு கண்ணிமார் காேவில், கல்லாற்று கண்ணிமார் காேவில், தேவிப்பட்டினம், தட்டாங்குளம் காளியம்மன் காே வில் மற்றும் ஏனைய காேவில்களில் வீற்றிருக்கின்றார்.

அனைத்து ஆன்மீக பெருமக்களும் லாட சந்நியாசியின் சந்நதிக்கு சென்று வழிபட்டு அருள் பெறுமாறு கேட்டுக் காெள்கிறாேம்.

லாட சந்நியாசியின் பிஜ மந்திரம்.

***ஓம் உங் அங் வங் லாடசந்நியாசியே நமக. ***

– ராமசுப்பு ராஜா

ramasubu