தூத்துக்குடி சுற்றுலா

37
1603
தூத்துக்குடி சுற்றுலா
Advertisement

பனிமய மாதா சர்ச்:

 
Hotel image
 
Advertisement

பனிமய மாதா சர்ச் 1714ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழகத்தின் புகழ் பெற்ற சர்ச்களில் இதுவும் ஒன்றாகும். பழமையான பனிமய மாதா பேராலயம் உள்ளது.

 
ஆண்டுதோறும் ஜூலை 26ல் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை இங்கு திருவிழா நடக்கும். இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்று தூத்துக்குடியில் <உள்ளது.

துறைமுகம்

 
Hotel image
 

இந்தியாவின் 10வது முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் கருதப்படுகிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம்.

 
மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய கன்டெய்னர் டெர்மினலும் இதுவாகும்.1974ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி துறைமுகம் அமைக்கப்பட்டது.
 

பாஞ்சாலங்குறிச்சி

 
Hotel image

 

பாஞ்சாலங்குறிச்சி ஒட்டப்பிடாரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையர்களுக்கு எதிரான குரலை இங்கிருந்தே எழுப்பியுள்ளார்.

 

திருச்செந்தூர் கோயில்

 
Hotel image
 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள ஊர்களில் ஒன்று திருச்செந்தூர். கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவர்வதாகும்.

 
அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் முருகன் கோயில்கள் மலை அல்லது குன்றின் மீது அமைந்திருக்கும்.
 
இந்த கோயில் வித்தியாசமாக கடற்கரையில் அமைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.
 
இந்த ஊர் முந்தைய வரலாற்றில் சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்து சமயத்தினரால் வழிபடப்படும் முருகப்பெருமான் தமிழ்மொழிக்கான கடவுளாகவும், தமிழர்களது கடவுளாகவும் கருதப்படுகிறார்.
 
இந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் கோயில்கள் சிறப்புடையதாகும்.
 
இந்த அறுபடை கோயில்களில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருச்செந்தூரில்தான் இருக்கிறது.

கோயில் வரலாறு

வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார்.
 
இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான்.
 
சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார்.
 
முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார்.
 
கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன், பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான்.
 
சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது.
 
சூரபத்மனின் ஒரு பாதி ‘நான்’ எனும் அகங்காரம், மறுபாதி ‘எனது’ எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது.
 
அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின.
 
சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது.
 
இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

சிறப்புக்கள்

* திருச்செந்தூர் கோயில் கடற்கரையோரம் அமைந்திருப்பதால் பார்வைக்கு அழகாக இருக்கிறது.
 
* திருச்செந்தூர் கோயிலின் அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ள பகுதி நாழிக்கிணறு.
 
இந்த நாழிக்கிணற்றில் இருக்கும் தண்ணீர் உப்பு சுவையாக இல்லாமல் குடிப்பதற்கு ஏற்ற நல்ல தண்ணீராக இருப்பது இங்கே சிறப்பு.
* இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.
* இந்தப்பகுதியில் கிடைக்கும் பனைமரங்களின் ஓலைகளில் இருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அதிகமாக இங்கு கிடைக்கிறது.
* திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையிலுள்ள கடற்கரைப் பகுதியில் கடல் நீரிலிருந்து உப்பு உருவாக்கப்படும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன.

பயண வசதி

தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவில் இருப்பதால் இந்தக் கோயிலில் வழிபடும் பக்தர்களின் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

அய்யனார் சுனை

 
Hotel image

திருச்செந்தூர் கோயிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் அய்யனார் சுனை அமைந்துள்ளது. இங்கு உள்ள சுனையில் நல்ல நீர் கிடைக்கிறது.

 
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இங்கு கட்டாயம் செல்வர்.
 

எட்டயபுரம்

 
Hotel image
 

தேசிய கவி மகாகவி பாரதியார் தூத்துக்குடியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். உமறு புலவரின் நினைவிடம் இங்கு உள்ளது.

 
பாண்டியர்களின் ஆட்சியில் சித்தூர் அருகே உள்ள சந்திரகிரி மக்கள் திசைக்காவலர்களாக இளசநாட்டில் நியமிக்கப் பட்டனர்.
 
பின்னர் இந்த ஊர் எட்டயபுரம் என அழைக்கப்பட்டது. எட்டயபுரம் 1565ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 

கயத்தாறு

 
Hotel image
 

கயத்தாறு : கயத்தாறு திருநெல்வேலியில் இருந்து 23 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 17 மதுரை சாலையில் அமைந்துள்ளது.

 
கட்டபொம்மன் இந்த இடத்தில் தான் தூக்கிலிடப்பட்டார். இந்த இடம் நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 

கழுகுமலை

 
Hotel image
 

ஜைனர்களின் முக்கிய இடமாக கழுகுமலை விளங்குகிறது. ஜைனர்களின் கல் வெட்டுக்கள் இங்கு காணப்படுகிறது. குகைக் கோயிலான வேட்டுவன் கோயில், இங்கு பார்க்கத்தக்க இடமாகும்.

 
 

குலசேகரபட்டினம்

 
Hotel image
 

குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் நடைபெறும் தசரா விழா சிறப்பானதாகும்.

 
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் இதில் பங்கேற்பர். குலசேகரபட்டினம் சிறிய கடற்கரை கிராமமாகும்.
 

மணப்பாடு

 
Hotel image
 

திருச்செந்தூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் மணப்பாடு அமைந்துள்ளது. மணப்பாடு வங்கக்கடலில் கரையில் அமைந்துள்ளது.

 
இங்குள்ள கத்தோலிக்க சர்ச்சில் உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டது என கூறப்படுகிறது.
 
இந்த சர்ச் மேற்கத்திய நாடுகளில் உள்ளள செயின்ட் சேவியர் மிஷினரியுடன் இணைந்ததாகும்.
 
இங்கு பல சிறிய சர்ச்களும் உள்ளன. எனவே இந்த இடம் சின்ன ஜெருசலேம் என அழைக்கப்படுகிறது.
 

வ.உ. சிதம்பரனார் இல்லம்

 
Hotel image
 

ஒட்டப்பிடாரம் விடுதலை போராட்ட வீரர்களின் முக்கிய இடமாக கருதப்படுகிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை இங்கு தான் பிறந்தார்.

 
அவரது வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு டிசம்பர் 12, 1961ம் ஆண்டு முதல் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
167.12 சதுர மீ., பரப்பளவில் நினைவு இல்லம் அமைந்துள்ளது.
 

ஸ்ரீவைகுண்டம்

Hotel image
 

ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் கண்ணபிரான் வீற்றிருக்கிறார்

 

வாஞ்சி மணியாட்சி

 
Hotel image
 

இதன் மூலபெயர் மணியாட்சி என்பதாகும். வாஞ்சிநாதன் என்ற சுதந்திர போராட்ட வீரர் இந்த இடத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

 
அவரது தீரச்செயலுக்காக அந்த ஊருக்கு வாஞ்சி மணியாட்சி என பெயரிடப்பட்டது.
 

திருப்புளியன்குடி

 
Hotel image
 

திருப்புளியன்குடி பெருமாள் கோயில் திவ்யதேசமாக கருதப்படுகிறது. இது மூன்று திருப்பதி என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஸ்ரீ வைகுண்டம் – தூத்துக்குடி பஸ் வழித்தடத்தில் அமைந்துள்ளது.