ட்ரம்ப் வந்து விட்டார் அடுத்து மைத்திரி மரணிப்பாரா? – அதிர்ச்சியில் இலங்கை வாசிகள்!

36
886
ட்ரம்ப் வந்து விட்டார் அடுத்து மைத்திரி மரணிப்பாரா? - அதிர்ச்சியில் இலங்கை வாசிகள்!
Advertisement
Advertisement

ஒரு பக்கம் உண்மை, மறுபக்கம் பொழுது போக்கு அத்தோடு வதந்தி இவை அனைத்தும் கலந்த கலவைதான் சமூக வலைத்தளங்கள் என்பது தெரிந்த விடயம்.

ஆனாலும் எதுவாக இருந்தாலும் இதன் மூலம் மக்களிடம் செய்திகள் வேகமாக சென்றடையும் என்பது மட்டும் நிச்சயம்.

ஆரூடம் என்பதை குருட்டான் போக்கு என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனாலும் அதன் மீது நம்பிக்கையும் புரியாத உண்மைகளும் மட்டும் இருக்கத்தான் செய்கின்றன.

தற்போது தென்னிலங்கை சமூக வலைத்தளங்களில் வேகமாக அதே சமயம் அதி பயங்கரமான செய்திகள் பரப்பப்படுகின்றன.

அதுவே இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என்பது.

இலங்கையில் பிரபல சோதிடர் விஜயமுனி விஜித் ரோஹன கூறிய கணிப்புகளில், மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பதும், ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆவார் என்பதும் நிறைவேறிவிட்டன.

அதேபோல், மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார், ரொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆவார் என்பதும் நடந்து விட்டது, அடுத்ததாக அவர் கூறிய ஆரூடம் தான் மைத்திரி மரணிப்பார் என்பது.

அவர் கூறிய அனைத்தும் நடந்து விட்டது தற்போது மைத்திரி பற்றி அவர் கூறியதும் பலித்துவிடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

வதந்தியோ உண்மையோ தெரியாது, ஆனாலும் இலங்கைவாசிகளை பதற்றத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது இந்த விடயம்.