டிரஸ் தருதே தன்னம்பிக்கை! A to Z ரகசியங்கள்

33
1023
டிரஸ் தருதே தன்னம்பிக்கை! A to Z ரகசியங்கள்
Advertisement
Advertisement

நல்ல நீட்டான, பிரைட்டான ஆடை அணிந்தால் கிடைக்கும் தன்னம்பிக்கை நிச்சயம் வேறு லெவல்தான் அல்லவா? மாணவர்கள், பணியாளர்கள், வேலை தேடுபவர்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியம் என A to Z ரகசியங்கள் விவரிக்கிறார் தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆராக பணிபுரியும் கார்த்திக்.

நாம் அணியும் உடையைப் பார்த்து, ‘‘அட! ரொம்ப நல்லா இருக்கே’’ என பிறர் சொல்ல வேண்டும் என்பது அனைவரின் ஏக்கம்தான்.

ஒருவரின் ஆடையைப் பொறுத்தே அவரது மதிப்பு எனும்போது சமூகத்தில் ஆடைக் கண்ணோட்டத்தை சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது.

ஆண்கள், பெண்கள் ஆகியோரின் ஆடைகள் வேறு வேறு என்றாலும், இருவரிடமுள்ள ஒற்றுமை ‘காலத்திற்கேற்ப ஃபேஷனாக இருக்கவேண்டும்’ என்பதுதான்.

சூழலுக்கேற்ப மாறும் நாகரிகம் குறித்த தெளிவு நம்மிடம் இல்லை என்பதால், எந்த இடத்தில் என்ன உடை அணிவது என்ற குழப்பம் ஏற்படுகிறது.

பொதுவாக அனைவராலும் ஏற்கப் படாத ஆடைகளை நாம் தவிர்ப்பது அவசியம். உடை குறித்த சிந்தனையில் நம்முடைய பொது அறிவைப் பயன்படுத்தினாலே போதும்.

எ.கா: வீட்டில் லுங்கி, ஷார்ட்ஸ் அணியலாம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலையிடங்களில் லுங்கியை, ஷார்ட்ஸை அணிய முடியாது.

பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போது நம் உடை பிறரை ஈர்க்க வேண்டும் என்று நினைப்போம். மாணவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் பண்டிகைக்கு லேட்டஸ்ட் டிரஸ் என்ன வாங்கலாம் என்பதுதான் ஒரே சிந்தனையாக இருக்கும்.

உளவியல்ரீதியாக, ஒருவர் புத்தாடை அணியும் நாளில் சுறுசுறுப்பாகவும், மலர்ச்சியுடனும் தன் வேலைகளை திருப்தியோடும் முழு ஈடுபாட்டோடும் செய்து முடிப்பார் என்கிறார்கள்.

வசதியாகவும், காற்றோட்டமாகவும் உடையை அணிவது அவசியம். உடையின் ஈர்ப்பு என்பதை விட, அணியக்கூடாத ஆடைகள் எவை என அறிந்திருப்பது அவசியம்.

‘‘என்ன, இப்படி டிரஸ் பண்ணியிருக்கறீங்க?’’ என்று பிறர் கூறும்படியான உடைகளையும், பளீர் நிற உடைகளையும் தவிர்க்கலாம்.

நேர்காணலுக்கு கண்டிப்பாக டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து செல்லக்கூடாது.

நேர்காணலுக்குச் செல்லும்போது வெளிர் நிற ஃபார்மல் முழுக்கை சட்டை, அடர்நிற பேன்ட் அணியலாம்.

அதேபோல் அடர்நிற சட்டைக்கு கான்ட்ராஸ்ட்டாக வெளிர்நிற பேன்ட் அணியலாம். சட்டை, பேன்ட் இரண்டுமே அடர்த்தியான நிறங்களிலோ (அ) வெளிர் நிறங்களிலோ இருக்கக்கூடாது.

சரியான ஃபிட்டிங்கில் அணிய சவுகரியமாகவும் இருக்க வேண்டும். சரியான ஃபிட்டிங் இல்லாத உடை அணிந்து நேர்காணலுக்குச் சென்றால் நம் கவனம் உடையின் மேல்தான் இருக்குமே தவிர, அங்கு கேட்கப்படும் கேள்விகளின் மேல் இருக்காது.

பிளெய்ன் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் சட்டைகளை அணியலாம். சட்டையில் எழுத்துக்களோ, சின்னங்களோ இருக்கக் கூடாது.

தற்போது சில பிராண்டட் சட்டைகளில் அவர்களின் லோகோவை சட்டை பாக்கெட் பகுதியில் சிறிய அளவில் குறிப்பிடுகிறார்கள்.

அதுபோன்று இருந்தால் அணியலாம். முழுக்கை சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டு மடிக்காமல் அணியவேண்டும்.

சட்டையை பேன்ட்டினுள் முழுமையாக இன் செய்ய வேண்டும்.

அணியும் பேன்ட், பிளெய்ன் நிறத்தில் ஃபார்மல் பேன்ட்டாகவும், பக்கவாட்டில் இரு பாக்கெட்டுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

வெள்ளை, கறுப்பு, பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் பேன்ட் நிறம் இருக்க வேண்டும். பேன்ட்டின் அடிப்பகுதி தரையில் உரசாமலும், சாக்ஸ் வெளியே தெரியாமலும் இருத்தல் அவசியம்.

பெல்ட்டுகள் கறுப்பு, பிரவுன் நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும். பெல்ட்டின் பக்கிள்ஸ் மீடியம் சைஸில் இருக்க வேண்டும்.

அணியும் டை சிவப்பு, கறுப்பு, நீலம் என சட்டையின் நிறத்துக்கு ஏற்ப அணியலாம். லேஸ் ஷூ, கட் ஷூ அணியலாம்.

ஷூவின் நிறத்தில்தான் அதன் ஷூ லேஸும் இருக்க வேண்டும்.

ஷர்ட் பட்டன்கள், பேன்ட்டின் பெல்ட் ஹோல்டர் மற்றும் பேன்ட்டின் ஜிப் இவை மூன்றும் நேர்க்கோட்டில் இருப்பது அவசியம்.

பெண்கள்

பெண்களின் ஃபார்மல் உடைகள் என்றால் புடவைகள், சல்வார் போன்றவை. ஷர்ட் – பேன்ட் அணிந்து அதற்கு மேலாக கோட் அணிந்தால் கம்பீரமாக இருக்கும்.

சாதாரண காட்டன் உடைகள் நல்ல ரிச் லுக் தரும். பிசினஸ் உடையான கோட் சூட் அணிந்தால் கால் விரல்களை மறைக்கும்படியான ஷூக்களை அணியலாம்.

மற்ற உடைகளுக்கு சாதாரண ஸ்லிப்பர்கள் அணியலாம். அதேபோல் கால்களில் ஒலி எழுப்பாத மெல்லிய கொலுசு அணியலாம்.

அளவான மேக்கப் இருந்தால் பார்க்க பளிச்சென அழகாக இருக்கும்