சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே சபரிமலை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

37
997
சபரிமலை சிறப்பு ரயில்கள்
Advertisement
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை தொடங்குவதையொட்டி சென்னை சென்ட்ரல் -கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 06041:

நவம்பர் 14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

ரயில் எண் 06042:

நவம்பர் 15,17,22,24,29 டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06047:

நவம்பர் 16,23,30 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

ரயில் எண் 06048:

நவம்பர் 17,24 டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06049:

நவம்பர் 22,29 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

ரயில் எண் 06050:

நவம்பர் 23, 30 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து 9.20 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவலா, செங்கநூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் ரயில் எண் 06045:

நவம்பர் 19, 26 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

ரயில் எண் 06046:

நவம்பர் 20, 27 ஆம் தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவலா, செங்கநூர், காயங்குளம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.