ஆன்லைன் படிப்புகள் – 3

43
964
ஆன்-லைன் படிப்புகள்
Advertisement
Advertisement

உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் படிப்புகள் குறித்த தொடர்ச்சி இதோ…

 ஹார்வர்டு பல்கலைக்கழகம்: 

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள், வெளிநாட்டுக்கு சென்று, பல லட்சங்கள் செலவு செய்து தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உலகில் சிறந்த கல்வியை வழங்கும் பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தியும் இளநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பினை படிக்கலாம்.

ஆன்லைன் படிப்புகள்: 

கலை மற்றும் வடிவமைப்பு, வணிக மேலாண்மை, கணினி அறிவியல், அறிவியல், பொருளாதாரம் மற்றும் நிதி, கல்வி மற்றும் நிறுவன மேம்பாடு, சுற்றுச்சூழல் அறிவியல், அரசு, சட்டம் மற்றும் அரசியல், வரலாறு, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், மதம் மற்றும் ஆன்மிகம், அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல் மற்றும் கணிதம் மற்றும் பகுப்பாய்வு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமோ போன்ற படிப்புகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: 

www.extension.harvard.edu  மற்றும் www.online-learning.harvard.edu

 

பென்சில்வேனியா பல்கலைக்கழகம்: 

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.

செயல்முறை கல்வி அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு, அவர்களின் துறை சார்ந்த அறிவு மற்றும் ஆளுமை திறன்களை வளர்க்க, ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து செயல்படுவது இதன் சிறப்பம்சம்.

சான்றிதழ் படிப்புகள்: 

உயிரியல், பொருளாதாரம் மற்றும் நிதி, வணிகம், வணிக மேலாண்மை, சமூக அறிவியல், கலை, அறிவியல், கணிதம், புள்ளியியல், சட்டம்

வரலாறு, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு, மருத்துவம், இசை, கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வகையான சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு:  www.upenn.edu