ஆன்மீகம் என்றால் என்ன ?

42
1799
ஆன்மீகம் என்றால் என்ன ?
Advertisement
Advertisement

மனிதப்பிறவிக்கு இருக்கும் பல்வேறு உணர்வுகளில், அடிப்படையாக இருக்கும் உணர்வு “பயம்”தான் என்கின்றனர் அறிஞர்கள்.பிறப்பு என்பது அவனுக்கு ஒரு பயம் தரும் விஷயம்.

மரணம் மற்றாெரு வகையில் அவனைப் பயமுறுத்துகிற விஷயமாக இருக்கிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே நாளை என்ன நடக்கும் என்று தெரியாத “மனதின்” நடுக்கம் அவனை அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது.

இந்தப் பயங்களில் இருந்து தப்பிக்க அச்சம் அளிக்கக் கூடிய வகையில் தன் மனதில் தாேன்றும் கற்பனைகளில் இருந்து மீள, காெஞ்ச நேரமாவது இந்த திகில் எண்ணங்களின் சுமையை மனதிலிருந்து இறக்கி வைக்க மனிதன் கண்டுபிடித்த வழிதான் “ஆன்மீகம்” ஆகும்.

– ராமசுப்பு ராஐா